*********************************************************************************
டிஸ்கி:
மனத்தில் தோன்றியதை கிறுக்கி இருக்கிறேன். கட்டுரை போல இருக்கும். விருப்பம் இருப்பவர் மட்டும் படிக்கலாம்.

கற்காலம் துவங்கி கணினி காலம் வரையில், பெண்கள் படும் அவதிகள் பல. ஆண் என்றால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். பெண் என்பவள் இப்படி தான் இருக்க வேண்டும் என்பது இன்றும் எழுதாத சட்டம். அவற்றை வகுத்தது பெண்ணா இல்லை ஆணா என்பதை நான் அறியேன்.
உதரணத்திற்கு ஆங்கில மொழியில் இருபாலருக்கும் தனியாக வார்த்தைகள் உண்டு , அனால் சில வார்த்தைகள் பொதுவாக இருக்கும். (e.g widow )
ஆனால் தமிழில் உள்ள சில வார்த்தைகள் பொதுவாக தோன்றினாலும் அவை பெண்ணை மட்டுமே சாடுகின்றது.
* விதவை * மலடி * வாழா வெட்டி * சக்களத்தி * வேசி * ஓடுகாலி * வாயாடி * பஜாரி *
பெண்களை போற்றுவதாக கூறும் இந்த சமூகம் , உள்ளே அடிமைகளாவே வைக்கிறது. பெண்ணை சக்தியின் ஸ்வரூபம் என்று பேச்சளவிலேயே வைத்துள்ளனர். பூமா தேவி , பாரத மாதா என்று கூறுவதாலும் , நதிகளுக்கு பெண்ணின் பெயர் வைத்திருப்பதாலும் , அவர்கள் போற்றபடுவதாக ஏற்க முடியாது.
அடுப்படியில் சிறை பட்டு , வெறும் கேளிக்கை பொருளாக , அடக்கி ஒடுக்கப்பட்ட காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி , இன்று படித்து பல துறையில் சாதனை புரிந்தாலும் இவர்கள் சந்திக்கும் இடர்பாடுகள் பல.
"இப்ப எல்லாம் பொண்ணுங்க வேலைக்கு போறேன்னு சொல்லி வீட்டுல சமைக்கிறதே இல்ல.." - அலுவலகத்தில் உணவு மேடையில் சக ஆண் ஊழியர் உரைத்த வாசகம் இது. வயித்தெரிச்சல் பிடித்தவர். பெண், சமைப்பதற்கு ஒரு வேளை ஒய்வு கொடுத்து கடையில் வாங்கி சாப்பிட்டால் இவருக்கு என்ன போச்சாம் ? வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒரு நாள் சமைக்க விடுமுறை கொடுத்து கடையில் வாங்கி சாப்பிட வேண்டியது தானே? சொந்த காசை செலவு செய்ய மாட்டார்கள். யாராவது ஓசியில் பிரியாணி வாங்கி தருவதாக சொன்னால் தாய் / தமக்கை / திருமதி சமைத்த உணவை குப்பை தொட்டிக்கு தந்து விட்டு , பிரியாணியை ஒரு வெட்டு வெட்டுவர்.
எங்க வீட்டுக்காரர் ஒரு நாள் உரையாடும் போது சொன்னார் "ஒரு பெண் ஜில்லா கலெக்டரா இருந்தாலும் அவ புகந்த வீட்டுல மாட்டு தொழுவம் இருந்தா அதை சுத்தம் செஞ்சுட்டு தான் உத்தியோகத்துக்கு செல்ல முடியும்". இதற்கு ஆதாரம் என்னிடம் இல்லா விட்டாலும், மறுத்து பேச முடியவில்லை.
பெண்களின் நிலை முற்றிலும் மாறியதாக சொல்வதற்கு இல்லை. இன்றும் பெண் சிசு கொலை முதல் , சமையல் உருளை வெடித்தல் என சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
நம் நாட்டில் பத்தாவது , பன்னிரெண்டாவது தேர்வில் , தேர்ச்சி விகததில் பெண்களே அதிகம், ஆனால் தொழில் துறை சாதனையாளர் பட்டியலில் பெண்கள் மிக சிலரே. காரணம் சமுதாய சூழல். இருந்தும் தோல்வியை கண்டு துவளாது , விடா முயற்சியுடன் சில பெண்கள் வெற்றி நடை போடத்தான் செய்கிறார்கள்.
பெண்ணே நீ எழும்பு , புது சரித்திரம் எழுது!!!

You are writing in very good Tamil. Continue writing.
ReplyDelete