தானுவை, தன்னோட குட்டி பிரண்டு , என்று தான் தானேஷோட அப்பா எப்பவும் சொல்லுவாரு.
போன வாரம் என்கிட்டே பேசும் போது தாணு "அம்மா நான் இப்போ பெரிய பையனா வளர்ந்துட்டேன். அதனால நீ தான் என் பிரண்டுன்னு சொன்னான்". புல்லரிச்சு போச்சு..
தோளுக்கு மேல் வளர்ந்தா தோழன் என்பார்கள். ஆனா இப்பலாம் பிள்ளைகள், ப்ரீ.கே.ஜி. படிக்கும் போதே பெற்றவர்களை பிரண்டாக பார்கிறார்கள்.
ரெண்டு நாள் கழித்து, லேப்டாப்பில் கார்ட்டூன் போட மாட்டேன் என்றவுடன், "போ.. நீ என் பிரண்டே இல்ல. உன்னோட நான் பேச மாட்டேன்" என்றான். கொஞ்ச நேரம் கழித்து போட்டு விடுறேன் என்றதும் , "அம்மா நீ குட் கேர்ள் அம்மா. நீ தான் என் பிரண்டு" என்றான். நீ என் பிரண்டு இல்லைன்னு தானே சொன்ன என்றதற்கு, "தெரியாம சொல்லிட்டேன்..வந்து.. மறந்து போய் சொல்லிட்டேன். நீ என் பிரண்டு தான்" என்றான்.
-- தானேஷ் அம்மா

Nice...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete@SPGR:
ReplyDeleteThanks...