ஏன் , எதற்கு , எப்படி ... என்கிற கேள்விகள் , தானுவிற்கு எப்பவும் பிடித்தவை..
சமீபத்தில் அவன் கேட்ட கேள்விகள் சில.
1 அம்மா கோவில்ல சாமி ஏன் எப்பவும் பாட்டு கேட்டுகிட்டே இருக்கு ?
*** எல்லா கோவில்லயும் ஸ்பீக்கர்ல பாட்டு போட்டிருந்தார்கள் ***
2 ஏ சி பஸ் , ஏ சி கார் மாதிரி ஏன் பைக்ல ஏ சி இல்லை ?
*** பைக்ல போகும் போது வெயில் தாங்க முடியலையே பா ***
3 நான் பாட்டி தாத்தா வீட்டுக்கு போயிருந்த போது நீயும் அப்பாவும் கல்யாணம் பண்ணிட்டீங்களா ?
*** ஆல்பம்ல தன்னோட போட்டோ இல்லியே ***
4 அப்பா அந்த கார் அஞ்சு ரூபா வா ,பத்து ரூபா வா இல்ல ரெண்டு ரூபா வா ?
*** பணம் கொடுத்தாதான் பொருள் கிடைக்கும்னு கத்துகிட்டோம்ல ***
5 அம்மா எதுக்கு கரண்ட்டு கட் ஆகுது ?
*** அவசியம் தெரிஞ்சுக்க வேண்டியது தான் ***
கேள்வி கேட்குறது ஈசி , ஆனா பதில்... ரொம்ப கஷ்டம்... வேண்டாம் அழுதுடுவேன்...
-- தானேஷ் அம்மா