Have a nice day readers...!!!
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, August 26, 2021

படம் பார்த்து கவிதை எழுது

 



கரும்  புகை 


வீட்டின் கூரையிலே 
ஆலையின் குழாயினிலே 
வரும் கரும் புகையே 

வானின் மேகங்களையே 
குறிவைத்து செல்கிறாயே 
மழையை விஷமாக மாற்றுகிறாயே 

உன் விஷத்தை அழிக்க 
மனிதர்கள் போராடினரே 
ஆனால் உன் விஷம் போகவில்லையே 

உன் விஷத்தை அழிக்க 
உன்னை அழித்தால் போதுமே 
நீ அழிந்து விட்டாய் என்றால் 
வானும் நிலமும் பொன் நிறம் ஆகுமே 

-- தானேஷ் அம்மா 

குறிப்பு : தானேஷ் எழுதியது 

Tuesday, August 10, 2021

படம் பார்த்து கவிதை எழுது

 





அலை கடலே 

அலையே கடலலையே 
ஆரவார  கடற்கரையே 

பொங்கும் கடலே 
போராட்டக் களமே 

அஞ்சோம் நாமே 
அரவணைத்தோம் சேர்ந்தே 

வெல்வோம் ஒன்றிணைந்தே 
வெற்றி எமதே 

-- தானேஷ் அம்மா 

Sunday, March 17, 2013

நிலா சிநேகம்

மழலை பருவத்தில் அன்னை
அறிமுகம் செய்தாள் உன்னை

நிலா என்று சொல்லி அமுதூட்டினாள்
நம் சிநேகம்  ஆரம்பித்தது அன்று

ஆதவனிடம்  இருந்து  இரவல் வாங்கி
அம்புலி நீ அழகாய் தோன்றினாய் 


தனிமை மறக்க என்னுடன் நடந்தாய்
என்னை மகிழ்விக்க கண்ணாமூச்சி ஆடினாய்

சில நாள் கோபம் கொண்டு
சந்திக்க மறுப்பாய்

சில நாள் மகிழ்ச்சி  கொண்டு
முழு மதியாய் சிரிப்பாய்

இன்றும் அதே சிநேகத்துடன்
என் மகனுடன் நீ... 


-- தானேஷ் அம்மா 

Friday, December 14, 2012

காதல் - சுவை

காதல் - சுவை  

கண்டதும் உவர்ப்பு
கனிந்ததும் இனிப்பு
ஊடலில் கார்ப்பு 
பழகியதும் புளிப்பு
வேற்றுமையில் துவர்ப்பு
தோல்வியில் கசப்பு 



-- தானேஷ் அம்மா

Wednesday, October 24, 2012

வெண் குடை




மழை நீர் துளிகள் கண்டதும்
      நீ உயிர்த்தாய்
உன் அழகு தோற்றம் கண்டதும்
      நான் சிலிர்த்தேன்


-- தானேஷ் அம்மா

Thursday, February 25, 2010

சூரியக் காதல்

நிலா பெண்ணிற்கு
சூரியன் மேல் காதல்..

வெப்பத்தின் இருப்பிடம் கதிரவன்
குளிர்ச்சி தருவது நிலா...

இருவரும் நேர் மாறானவர்கள்
ஆனால் காதலுக்கு தான் கண் இல்லியே...

எதிர் துருவ காந்த அலைகள் போல
இவ்விருவரும் காதலால் ஈர்க்கப்பட..

நிலா சூரியனை சந்திக்க
சூரியக்காதல் சூரிய கிரகணம் ஆனது..

--சென்ற மாதம் வந்த சூரிய கிரகணம் தந்த பாதிப்பால் விளைந்தது இது.