பல நேரம் தீபக் அடம் பிடிப்பான். அதோட இல்லாது "இப்படி செய் அப்படி செய் " ஒரே ஆர்டர் தான். தீபக் சொன்ன பேச்சு கேட்கலைன்னா , அவன் வாயை அடைக்க " நீ அம்மாவா நான் அம்மாவா ?" அப்படி கேட்டா போதும். "நீ தான் அம்மா , அம்மா பேச்சை கேட்குறேன் " அப்படின்னு அமைதியா சொன்ன பேச்சு கேட்பான்.
இதை பார்த்த அவன் அண்ணன் , தம்பி தான் சொன்ன பேச்சை கேட்காத போது "நீ அம்மாவா , அம்மா அம்மாவா ?" கேட்டான். எனக்கு சிரிப்பு வந்தது. பாவம் சின்ன பையன் . "நீ அண்ணனா நான் அண்ணனா ?" என்று கேட்க தெரியவில்லை பையனுக்கு .
-- தானேஷ் அம்மா
-- தானேஷ் அம்மா