Have a nice day readers...!!!
Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Wednesday, June 27, 2012

குட்டி குறும்பு [2] - அத்தையை கல்யாணம் பண்ணிக்கிறேன்...

இரண்டு நாள் முன்பு , எங்க திருமண நிகழ்வை டி.வி. யில் போட்டு கட்டினோம். தாணுவிடம் சும்மா கேட்டோம். தம்பி , நீ யாரை கல்யாணம் பண்ணிக்கிற ? உடனே பதில் வந்தது.. "தீபக் தம்பியை கல்யாணம் பண்ணிக்கிறேன்". உடனே நாங்க , பாய் ஒரு கேர்ள் தான் கல்யாணம் பண்ணனும் என்றோம்.

அடுத்த நொடி பதில் வந்தது. "அம்மா நான் உன்னையே கல்யாணம் பண்ணிக்கிறேன்". நாங்க சிரித்து விட்டு சொன்னோம். அம்மாக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சே. அமைதியாக யோசித்தவன் கேட்டான். "ஷென் அத்தைக்கு கல்யாணம் ஆயிடுச்சா?" நாங்க இல்லை என்றதும் , "அப்போ நான் ஷென் அத்தையை கல்யாணம் பண்ணிக்கிறேன். "


அவங்க அப்பா உடனே, தம்பி நீ அத்தைய கல்யாணம் பண்ண முடியாது , வேணும்னா அத்தை கல்யாணம் ஆனதும் பிறக்கும், அத்தை மகளை கல்யாணம் பண்ணலாம் என்றார். தாணுவுக்கு புரிந்ததா இல்லையா என்று தெரியவில்லை. அவனிடம் ஒரு அமைதி மட்டுமே நிலவியது..


-- தானேஷ் அம்மா

Sunday, June 24, 2012

குட்டி குறும்பு [1] - நீ தான் என் பிரண்டு...

தானுவை, தன்னோட குட்டி பிரண்டு , என்று தான் தானேஷோட அப்பா எப்பவும் சொல்லுவாரு.

 போன வாரம் என்கிட்டே பேசும் போது தாணு  "அம்மா நான் இப்போ பெரிய பையனா வளர்ந்துட்டேன். அதனால நீ தான் என் பிரண்டுன்னு சொன்னான்". புல்லரிச்சு போச்சு..

தோளுக்கு மேல் வளர்ந்தா தோழன் என்பார்கள். ஆனா இப்பலாம் பிள்ளைகள், ப்ரீ.கே.ஜி. படிக்கும் போதே  பெற்றவர்களை பிரண்டாக பார்கிறார்கள்.



ரெண்டு நாள் கழித்து, லேப்டாப்பில் கார்ட்டூன் போட மாட்டேன் என்றவுடன்,  "போ.. நீ என் பிரண்டே இல்ல. உன்னோட நான் பேச மாட்டேன்" என்றான். கொஞ்ச நேரம் கழித்து போட்டு விடுறேன் என்றதும் , "அம்மா நீ குட் கேர்ள் அம்மா. நீ தான் என் பிரண்டு" என்றான். நீ என் பிரண்டு இல்லைன்னு தானே சொன்ன என்றதற்கு, "தெரியாம சொல்லிட்டேன்..வந்து.. மறந்து போய் சொல்லிட்டேன். நீ என் பிரண்டு தான்" என்றான்.

-- தானேஷ் அம்மா


Wednesday, March 21, 2012

என்னுள் தோன்றியவை...

*********************************************************************************
டிஸ்கி:
மனத்தில் தோன்றியதை கிறுக்கி இருக்கிறேன். கட்டுரை போல இருக்கும். விருப்பம் இருப்பவர் மட்டும் படிக்கலாம்.
*********************************************************************************

கற்காலம் துவங்கி கணினி காலம் வரையில், பெண்கள் படும் அவதிகள் பல. ஆண் என்றால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். பெண் என்பவள் இப்படி தான் இருக்க வேண்டும் என்பது இன்றும் எழுதாத சட்டம். அவற்றை வகுத்தது பெண்ணா இல்லை ஆணா என்பதை நான் அறியேன்.

உதரணத்திற்கு ஆங்கில மொழியில் இருபாலருக்கும் தனியாக வார்த்தைகள் உண்டு , அனால் சில வார்த்தைகள் பொதுவாக இருக்கும். (e.g widow )
ஆனால் தமிழில் உள்ள சில வார்த்தைகள் பொதுவாக தோன்றினாலும் அவை பெண்ணை மட்டுமே சாடுகின்றது.
* விதவை * மலடி * வாழா வெட்டி * சக்களத்தி * வேசி * ஓடுகாலி * வாயாடி * பஜாரி *

பெண்களை போற்றுவதாக கூறும் இந்த சமூகம் , உள்ளே அடிமைகளாவே வைக்கிறது. பெண்ணை சக்தியின் ஸ்வரூபம் என்று பேச்சளவிலேயே வைத்துள்ளனர். பூமா தேவி , பாரத மாதா என்று கூறுவதாலும் , நதிகளுக்கு பெண்ணின் பெயர் வைத்திருப்பதாலும் , அவர்கள் போற்றபடுவதாக ஏற்க முடியாது.

அடுப்படியில் சிறை பட்டு , வெறும் கேளிக்கை பொருளாக , அடக்கி ஒடுக்கப்பட்ட காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி , இன்று படித்து பல துறையில் சாதனை புரிந்தாலும் இவர்கள் சந்திக்கும் இடர்பாடுகள் பல.

"இப்ப எல்லாம் பொண்ணுங்க வேலைக்கு போறேன்னு சொல்லி வீட்டுல சமைக்கிறதே இல்ல.." - அலுவலகத்தில் உணவு மேடையில் சக ஆண் ஊழியர்  உரைத்த வாசகம் இது. வயித்தெரிச்சல் பிடித்தவர். பெண், சமைப்பதற்கு ஒரு வேளை ஒய்வு கொடுத்து கடையில் வாங்கி சாப்பிட்டால் இவருக்கு என்ன போச்சாம் ? வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒரு நாள் சமைக்க விடுமுறை கொடுத்து கடையில் வாங்கி சாப்பிட வேண்டியது தானே? சொந்த காசை செலவு செய்ய மாட்டார்கள். யாராவது ஓசியில் பிரியாணி வாங்கி தருவதாக சொன்னால் தாய் / தமக்கை / திருமதி சமைத்த உணவை குப்பை தொட்டிக்கு தந்து விட்டு , பிரியாணியை ஒரு வெட்டு வெட்டுவர்.

எங்க வீட்டுக்காரர் ஒரு நாள் உரையாடும் போது சொன்னார் "ஒரு பெண் ஜில்லா கலெக்டரா இருந்தாலும் அவ புகந்த வீட்டுல மாட்டு தொழுவம் இருந்தா அதை சுத்தம் செஞ்சுட்டு தான் உத்தியோகத்துக்கு செல்ல முடியும்". இதற்கு ஆதாரம் என்னிடம் இல்லா விட்டாலும், மறுத்து பேச முடியவில்லை.
பெண்களின் நிலை முற்றிலும் மாறியதாக சொல்வதற்கு இல்லை. இன்றும் பெண் சிசு கொலை முதல் , சமையல் உருளை வெடித்தல் என சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

நம் நாட்டில் பத்தாவது , பன்னிரெண்டாவது தேர்வில் , தேர்ச்சி விகததில் பெண்களே அதிகம், ஆனால் தொழில் துறை சாதனையாளர் பட்டியலில் பெண்கள் மிக சிலரே. காரணம் சமுதாய சூழல். இருந்தும் தோல்வியை கண்டு துவளாது , விடா முயற்சியுடன் சில பெண்கள் வெற்றி நடை போடத்தான் செய்கிறார்கள்.

பெண்ணே நீ எழும்பு , புது சரித்திரம் எழுது!!!

Sunday, April 17, 2011

Cube game speaks...

எப்படி இருந்த நான்....


இப்படி ஆயிட்டேன்....



எல்லாம் தானேஷ் பண்ணிய வேலை...


-- தானேஷ் அம்மா

Saturday, April 16, 2011

English to Tamil Translation

Disclaimer: Below content is written just for fun. So readers be cool. If you like them and identify more, drop them in the comments section.

Tamil translation for few of computer related words came out very funny. Presenting it for the readers to enjoy

windows - ஜன்னல்
mouse - எலி
keyboard - சாவி பலகை
hard disk - வன் தட்டு
motherboard - தாய் பலகை
caps lock - குல்லாய் பூட்டு
screen saver - திரை காப்பாளர்
laptop - மடி மேல்
control panel - கட்டுப்பாடு குழுமம்
wireless network - கம்பிஅற்ற வலைவேலை
photo shop - புகைப்பட கடை
dotnet - புள்ளி வலை
wall paper - சுவர் காகிதம்
thumb nail view - கட்டைவிரல் நக தோற்றம்
real player - அசல் ஆட்டக்காரர்
powerpoint - சக்தி புள்ளி
firewall - நெருப்பு சுவர்

--Dhanesh Amma

Saturday, June 26, 2010

அவனுக்கு தலையே இல்ல...

தலைப்பை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம்.. நிஜ மனிதனை பார்த்து சொல்லப்பட்டது அல்ல இது
எங்க தாணு குட்டி துணி கடையில் வைத்துள்ள தலை இல்லாத பொம்மைகளை பார்த்து சொன்னது.

அது நிஜம் அல்ல பொம்மை என்று சொல்லலாமா என்று யோசித்து, வேண்டாம் என்று அமைதியாகி விட்டேன்..
பின்ன... அந்த பொம்மை வாங்கிதாவென்று கேட்டா என்ன பண்றது ?

-- தானேஷ் அம்மா

Tuesday, June 15, 2010

Goat and Kid


A kid under shelter of Goat on a hot sunny day.

That's why it is told in tamil as, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் - "Parents are living gods"

Advance Fathers day wishes to Fathers and expecting Fathers. (Third sunday of June)

--Photo clicked by my sister at Rameshwaram - Ramar patham temple

Thursday, June 3, 2010

Danger: Smoking Daddy's kiss

புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் வாய் தொண்டையில் ஏராளமான பாக்டீரியாக்கள் தொற்றி இருக்கும். இதில் “மீனிங் கோகுஸ்” என்ற ஆபத்தான பாக்டீரியாவும் ஒன்று.

புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் யாருக்காவது முத்தம் கொடுத்தால் இந்த பாக்டீரியா உடனே அவர்களையும் தொற்றி கொள்ளும். இது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியா ஆகும்.

அதுவும் குழந்தைகளுக்கு முத்தம் கொடுத்தால் அந்த பாக்டீரியாக்கள் எளிதில் குழந்தைகளை தொற்றி அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடுகிறது.

பாக்டீரியா தொற்றுதல் மிகவும் அதிகமாகிவிட்டால் 10-ல் 1 குழந்தைக்கு மரணம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

எனவே புகை பிடிக்கும் தந்தைகள் குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பதை தவிர்க்கவேண்டும் என்று இங்கிலாந்து பேராசிரியர் ராபர்ட் பூயி எச்சரிக்கிறார்.

மன அழுத்தத்தை போக்கி கொள்ள புகை பிடிப்பதாக பலர் சொல்வார்கள். ஆனால் புகை பிடிப்பவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.



Message source: Maalaimalar news paper

It is also said that not only smokers, people who inhale the smoke from air also gets affected.

Smokers - They spoil their and also their family members life.

It is nothing but as said by a tamil statement :

sondha selavula sooniyam vachukkurathu...


--Dhanesh Amma

Monday, March 29, 2010

சன் குடும்ப விருதுகள்

தலைப்பை படித்ததும் நம் மக்களுக்கு புரிந்துவிடும் இது என்னவென்று. வெளி நாட்டில் இருப்பவர்களுக்கும் ஓரளவு புரியும் என்று நினைக்கிறன்..

மக்களை சீரழிக்கும் சீரியல் , தங்களுக்கு தாமே புகழாரம் சூடிக்கொள்கின்றன.

சினிமாவில் கூட, சிறந்த நடிகர், நடிகை , காமெடியன் , குண சித்திரம் , வில்லன் என்பதோடு முடிந்து விடுகிறது.. ஆனால் இங்கு அம்மா , அப்பா , மாமனார் , மாமியார் , தங்கை , அண்ணன் என்று குடும்பத்தில் என்ன என்ன உறவுகள் உண்டோ அனைவருக்கும் விருது..

இது பத்தாது என்று மக்கள் எஸ்.எம்.எஸ் மூலம் வோட்டிங் செய்ய வேண்டுமாம்.

( நம்ம மக்கள் தேர்தல் என்றால் வாக்களிப்பது இல்லை. தட்டு தடுமாறி ஐம்பது அல்லது அறுபது சதவிகிதம் வருது, பேசாம இந்த எஸ்.எம்.எஸ் முறை கொண்டு வந்தா நம்ம தேர்தல் கூட இரு நூறு சதம் வாக்கு வரும்ல...)

இந்த டான்ஸ் போட்டி , பாட்டு போட்டி ன்னு ஒரு சேனல் ஆரம்பிச்சதும் எல்லா சேனலும் அதையே பேரை மாத்தி ஆரம்பிச்சாங்க.. சீக்கிரத்தில் இதே போல எல்லா சேனலும் அரம்பிச்சுடும்னு நினைக்கிறேன்..

ஒரு கலைஞனுக்கு ஆஸ்கார் வாங்க ஆசை இருக்கும் , ஒரு விளையாட்டு வீரனுக்கு ஒலிம்பிக் மெடல் வாங்க ஆசை இருக்கும் , ஒரு விஞ்ஞானிக்கு நோபெல் வாங்க ஆசை இருக்கும்..

இனிமேல் இந்த அழுவாச்சி சீரியல் நடிகர்களுக்கு, குடும்ப விருது வாங்க ஆசை வரும்..

இதை பற்றி இன்னும் எழுத ஆசை தான்..

அதுக்கு சம்பத்தப்பட்ட சீரியல்கள் மற்றும் அதை சார்ந்த விருது நிகழ்வுகளையும் பார்க்க வேண்டும்..

வெறும் விளம்பரம் வாயிலாக இவ்வளவு தான் எழுத முடியும்..


-- தானேஷ் அம்மா

Thursday, February 25, 2010

சூரியக் காதல்

நிலா பெண்ணிற்கு
சூரியன் மேல் காதல்..

வெப்பத்தின் இருப்பிடம் கதிரவன்
குளிர்ச்சி தருவது நிலா...

இருவரும் நேர் மாறானவர்கள்
ஆனால் காதலுக்கு தான் கண் இல்லியே...

எதிர் துருவ காந்த அலைகள் போல
இவ்விருவரும் காதலால் ஈர்க்கப்பட..

நிலா சூரியனை சந்திக்க
சூரியக்காதல் சூரிய கிரகணம் ஆனது..

--சென்ற மாதம் வந்த சூரிய கிரகணம் தந்த பாதிப்பால் விளைந்தது இது.