ஒரு வருடம் முன்பு, நாங்க வீடு மாற்றி , புது வீட்டில் வசிக்க ஆரம்பித்த சமயம் நடந்த சம்பவம்.
ஒரு நாள் மாலை, அருகில் இருக்கும் கடை செல்ல தீர்மானித போது , தாணு நடக்க மாட்டேன் , பைக்ல போலாம் என்றான். ரெண்டு தெரு தள்ளி இருக்கும் கடைக்கு பைக்கா என்று யோசித்தவர் , சரி என்று பைக்கில் செல்ல முடிவானது.
கடை வாசலில் பார்கிங் செய்ய விரும்பாது என்னை மட்டும் அனுப்பினார். தாணு அவங்க அப்பா கூட ஒரே கதை. நான் திரும்பி வந்து பைக்கில் உட்கார்ந்ததை கவனிக்கவே இல்லை. வண்டி ஸ்டார்ட் ஆனதும் கத்த ஆரம்பித்து விட்டான்.
அப்பா , நிப்பாட்டு . அம்மா இன்னும் வரலை.
அம்மா வர லேட் பண்றால்ல, நடந்து வரட்டும் என்றார் அப்பா.
அம்மாக்கு வீட்டுக்கு வர வழி தெரியாது. கடைக்கு திரும்ப போ...
அப்படியா , பரவால்ல தம்பி நாம வேற அம்மா வாங்கிக்கலாம். வீட்டுக்கு போலாம் இப்போ என்றார்.
எனக்கு வேற அம்மா வேண்டாம் . இந்த அம்மா தான் வேணும். திரும்பி கடைக்கு போ என்றான்.
அதற்குள் வீடு வந்து விட , பின்னால் இருந்து இறங்கி அவன் முன் சென்று சிரித்தேன்.
தாணு என்னை பார்த்த பார்வை.. பைக்ல அமைதியா உட்கார்ந்துட்டு , என்னை டென்ஷன் படுத்திட்ட இல்ல என்பது போல இருந்தது..
-- தானேஷ் அம்மா